நோக்கு

"உயர்தர பொதுச் சேவையின் மூலம் ஒரு சிறந்த பிராந்தியத் தலைவராக உருவெடுத்தல்"

பணி

"அரச கொள்கைக்கு இணங்க, தேசிய வளர்ச்சிக்காக வளங்களையும் நிறுவனங்களையும் திறம்பட வழிநடத்தும், நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறையின் மூலம், மக்களின் தேவைகளைத் திறம்பட, நேர்மையாக, நீதியாக மற்றும் இணக்கமாகப் பூர்த்தி செய்தல்"
 

பிரதேச செயலாளரின் செய்தி

கொட்டபொல பிரதேச செயலகம் தங்களது சேவை பெறுனர்களுக்காக, 37 கிராம அலுவலர் பிரிவுகளூடாகவும் நேரடியாக பிரதேச செயலகத்திற்கு வருபவர்களும் திருப்தி அடையும் விதத்தில் வினைத்திறனான முறையில் அரச செவையை வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதனை அடைந்துகொள்வதற்காக நாம்,

  • அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்து, அளவீடு செய்து மற்றும் நிதமும் மென்மேலும் அபிவிருத்தி செய்வதன் மூலம் முகாமைத்துவ தொகுதியின் செயல் விலைதிறன் தன்மையை விருத்தி செய்வதற்கும்,
  • செயற்திறனான மற்றும் செயல் விலைதிறனுடனான வினைத்திறனான சேவையை வழங்குவதற்கும்,
  • சட்ட ரீதியான மற்றும் சட்டவாக்க தேவைகளுக்கு ஏற்ப செயற்டுவதற்கும்,
  • பிரதேச செயலாளர் அலுவலகத்தை சமூக கடமையுடன் முகாமைத்துவம் செய்தல்.

வரலாற்றுப் பிண்னனி

மொரவக் தொகுதியின் மேற்கு என குறிப்பிடப்பட்ட பகுதிக்கு உரித்தான இப் பிரதேச செயலாளர் பிரிவு வரலாற்று ரீதியாக முக்கிய இடத்தை வகிக்கிறது. மலைகள் நிறைந்த ஒரு பிரதேசமான இங்கு ஆதி வாசிகள் வாழ்ந்து இருப்பது இப் பிரதேச செயலாளர் பிரிவின் ஊடாக பாய்ந்தோடும் கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை இரு பக்கங்களிலுமாகும். இந்த ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆதி வாசிகள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு போதியளவு சாட்சிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஏகாதிபத்திய வாதிகள் மூலம் இப் பிரதேசத்திற்கு தேயிலைப் பயிர்ச் செய்கையை அறிமுகப்படுத்தியதன் பின்பு அவற்றில் கூலி வேலைகளுக்காக தென் இந்தியர்களை இங்கு வரவழைத்து குடியேற்றம் செய்யப்பட்டது. அதனுடன் பொருள் போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்து நடவடிக்கைகள் அவசியமானதாகியதால் உள்ளக போக்குவரத்து பாதைத் தொகுதிகள் மேலும் விருத்தி செய்யப்பட்டன.

இப் பிரதேசத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 2 பிரதான இடங்கள் காணப்படுகின்றன. அதாவது கெட்டபறுவை ரஜமஹா விஹாரை மற்றும் தேவாலயமும் கொலவெனிகம ரஜமஹா விஹாரையுமாகும். வலகம்பா மன்னன் ஸொலியினால் தோற்றுவிக்கப்பட்டதன் பின்னர் பாதுகாப்புக்காக பதுங்கி இருந்திருப்பது இப் பிரதேசத்தில் ஆகும். இப் பிரதேசத்திற்கு செய்யப்பட்ட ஒரு கௌரவமாக இந்த கெட்டபறு விஹாரை மற்றும்தேவாலயம் வலகம்பா மன்னரினால் நிர்மானிக்கப்பட்டது என ஒரு நம்பிக்கை காணப்படுகிறது. அதேபோல் மன்னர் பண்டார தேவர் இதன் தலைவர் என பிரதேச வாசிகளின் ஒரு நம்பிக்கையும் காணப்படுகிறது. கெட்டபறு ரஜமஹா விஹாரையில் வருடந் தோறும் அலங்காரமான ஒரு பெரஹரா நடாத்தப்படுகிறது. அது வருடத்தில் யூலை – ஆகஸ்ட் மாதங்களிலாகும்.

கொலவெனிகம ரஜமஹா விஹாரையும் அதே போன்ற ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். ஶ்ரீ புனித தந்த பெருமானை கள்வர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக புவனெக்கபாஹு மன்னரினால் 5 வருடங்களாக வைக்கப்பட்டிருந்தது இந்த ரஜமஹா விஹாரையிலாகும். அதற்கு வழங்கும் ஒரு மரியாதையாக இந்த ரஜமஹா விஹாரைக்கு 1798 ஏக்கர் விஷாலமான ஒரு நிலம் நன்கொடையாக மன்னரினால் வழங்கப்பட்டுள்ளது. இன்று வரையும் இந்த நன்கொடையாக வழங்கப்பட்ட நிலம் விஹாரையினால் நிர்வகிக்கப்படுகிறது.

பிரதேச செயலகப் பிரிவின் அமைவு     

தெனியாயையை கேந்திர நிலையமாகக் கொண்டு சிறிய நுவரெலியா என பட்டம் சூட்டப்பட்ட கொட்டபொல பிரதேச செயலகப் பிரிவு தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தின் அந்தத்தில், உலக உரிமை மழைக் காடு ஒன்றான சிங்கராஜ பூமிக்கு அருகில் 175.50 சதுர கிலோ மீட்டர் அளவினையுடைய எழில் மிகுந்த ஒரு சூழலில் அமைந்துள்ளது. மாத்தறை மாவட்டத்திற்கு உரித்தான 16 பிரதேச செயலகப் பிரிவுகளுள் ஒன்றான கொட்பொல பிரதேச செயலகம் வடக்கில் இரத்தினபுரி மாவட்டத்தின் கொலொன்ன பிரதேச செயலகப் பிரிவுக்கும், தெற்கில் மாத்தறை மாவட்டத்திற்கு உரித்தான பிட்டபெத்தறை பிரதேச செயலகப் பிரிவுக்கும், கிழக்கில் மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொடை பிரதேச செயலகத்துக்கும், மேற்கில் காலி மாவட்டத்தின் நெலுவை பிரதேச செயலகப் பிரிவுக்கும் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. பிரிவின் மொத்த நிலப் பிரதேசம் 175.5 சதுர கிலோ மீட்டர் ஆவதோடு 37 கிராம அலுவலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. அந்த 37 கிராம அலுவலர் பிரிவுகளில் 101 கிராமங்கள் காணப்படுகின்றன.

மாத்தறை மாவட்டத்தில் மிகவும் கஷ்டமான மற்றும் எழில் மிகுந்த பிரதேச செயலாளர் பிரிவு இது என்பதோடு கஷ்டத்தின் காரணமாகவே எழில் மிகு தன்மை இன்னும் பாதுகாக்கப்பட்டிருப்பதோடு சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சியை பெற்றுக்கொள்ள முடியுமான பல இடங்கள் இங்கு அமைந்துள்ளன.

பிரதேச செயலாளர் அலுவலகத்தின் அமைவு

கடல் மட்டத்திலிருந்து 425 அடி உயரத்தில் மற்றும் 6.175 வட அகலாங்கு மற்றும் 8.326 நெட்டாங்குகளுக்கு இடையில் எழில் மிகு தியதாவ பாதுகாப்பு அரணுக்கு எல்லையாக கொட்டபொல பிரதேச செயலாளர் அலுவலகம் அமைந்துள்ளதோடு 1940 ஆம் தசாப்தத்தில் மொரவக் தொகுதியின் கரவன உத்தியோகத்தர் அலுவலகம் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 50 ஆம் தசாப்தமாகும் போது பிரதேச வருமான உத்தியோகத்தர் அலுவலகம் எனவும், 1972 ஆம் ஆண்டில் உப மாவட்ட செயலாளர் அலுவலகம் எனவும், 1992 ஆம் ஆண்டில் பிரதேச செயலாளர் அலுவலகம் எனவும் அபிவிருத்தி அடைந்து குறைந்த எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்களுடன் ஆரம்பித்து இன்று ஆகும் போது இங்கு 150 க்கும் மேலான உத்தியோகத்தர் குழு சேவை புரியும் ஒரு அலுவலகமாக மாறியுள்ளது.

ஆரம்பத்தில் மொரவக் தொகுதிக்கே என அமைக்கப்பட்ட இந்த அலுவலகம் 1960 ஆம் தசாப்தத்தில் கடமையின் அளவு விஷாலமானதன் காரணமாக மொரவக் கோரளை கிழக்கு மொரவக் கோரளை மற்றும் மேற்கு மொரவக் கோரளை என இரணடாக பிரிக்கப்பட்டுள்ளன.

1956 ஆம் ஆண்டு முதல் கொட்டபொல பிரதேச செயலாளர் அலுவலகத்தில் சேவை புரிந்துள்ள தலைவர்கள்1956
 

தொ. இல.

பெயர்

பதவி

காலம்

01

திரு. டீ. ஜீ. அபேசிரி குணவர்தன

பிரதேச வருமான உத்தியோகத்தர்

1956-1957

02

திரு. ஆர் ஸீ. டபில்யூ. சந்திரகுலசூரிய

பிரதேச வருமான உத்தியோகத்தர்

1957-1958

03

திரு. அபேசேக்கர

பிரதேச வருமான உத்தியோகத்தர்

1958-1959

04

திரு. ஜே. ஸீ. பெரேரா

பிரதேச வருமான உத்தியோகத்தர்

1959-1960

05

திரு. கே. ஸீ. திசானாயக்க

பிரதேச வருமான உத்தியோகத்தர்

1960-1962

06

திரு. அய். விக்கிரமசிங்க

பிரதேச வருமான உத்தியோகத்தர்

1962-1964

07

திரு. வீ. சீ. கருணானந்த

பிரதேச வருமான உத்தியோகத்தர்

1964-1965

08

திரு. லால் ஜயதுங்க

பிரதேச வருமான உத்தியோகத்தர்

1965-1967

09

திரு. ஆர். எல். அர்சகுலசூரிய

பிரதேச வருமான உத்தியோகத்தர்

1967-1970

10

திரு. திசானாயக்க

பிரதேச வருமான உத்தியோகத்தர்

1970-1971

11

திரு. டபில்யூ. ஜீ. வெத்தசிங்க

பிரதேச வருமான உத்தியோகத்தர்

1971-1972

12

திரு. டபில்யூ. எப். பிரனாந்து

பிரதேச பிரதி மாவட்ட செயலாளர்

1972-1973

13

திரு. டீ. விக்கிரமாரச்சி

பிரதேச பிரதி மாவட்ட செயலாளர்

1974-1975

14

திரு. தர்மதாச ஹேவாகம

பிரதேச பிரதி மாவட்ட செயலாளர்

1975-1976

15

திரு. எஸ். கே. சமரசிங்க

பிரதேச பிரதி மாவட்ட செயலாளர்

1977-1978

16

திரு. டபில்யூ. என். பீ. கே. கமகே

பிரதேச பிரதி மாவட்ட செயலாளர்

1978-1984

17

திரு. எப். வீரசிங்க (வே. பா.)

பிரதேச பிரதி மாவட்ட செயலாளர்

1984-1986

18

திரு. மஹிந்த மானவடு

பிரதேச பிரதி மாவட்ட செயலாளர்

1986-1992

19

திரு. மஹிந்த மானவடு

பிரதேச செயலாளர்

1992- 1992.08.18

20

திரு. சந்திரதாச ஜாகொட

பிரதேச செயலாளர்

1992.08.18-1994

21

திரு. பிரன்ஸிஸ் விதான பத்திரன

பிரதேச செயலாளர்

1994-1995

22

திரு. விமல் ரூபசிங்க

பிரதேச செயலாளர்

1995.02.01-1995.07.04

23

திரு. ஏ. டபில்யூ. சரத்

பிரதேச செயலாளர்

1995.07.05-2000.02.03

24

திரு. டீ. கே. எஸ். அமரசிரி (வே. பா.)

பிரதேச செயலாளர்

2000.02.04-2001.09

25

திரு. பீ. ஏ. சிரிசேன

பிரதேச செயலாளர்

2001.09-2002.10.28

26

திரு. டீ. ஏ. ஏக்கநாயக்க

பிரதேச செயலாளர்

2002.10.29-2010.12.28

27

திரு. ஓ. வீ. ஸீ. திலக்கரத்ன

பிரதேச செயலாளர்

2010.12.29-2011.04.20

28

திரு.சேனக்க பல்லியகுருகே

பிரதேச செயலாளர்

2011.04.21-2012.09.18

29

திரு. சுவிந்த சிங்கப்புலி (வே. பா.)

பிரதேச செயலாளர்

2012-09.19-2012.12.31

30

திரு. டீ. டீ. கே. விக்கிரமாரச்சி (வே. பா.)

பிரதேச செயலாளர்

2013.01.06-2013.01.31

31

திருமதி. கௌசல்யா குமாரி (வே. பா.)

பிரதேச செயலாளர்

2013.02.01-2013.02.10

32

திரு. ஜீ. அமரசிங்க

பிரதேச செயலாளர்

2013.02.11-2021.11.20

33

திருமதி டபிள்யூ.பி.எஸ்.ஐ. பெரேரா

பிரதேச செயலாளர்

2021.11.22-2024.12.31

34

திருமதி கே.ஜி. தம்மி அனோஜா

பிரதேச செயலாளர்

2025.01.01-2025.01.09

35

திரு. டீ.கே. லந்தகே

பிரதேச செயலாளர்

2025.01.09 இப்போது வரை

News & Events

04
அக்2018
News & Events

News & Events

 

குடியுரிமை சாசனம்

News & Events

04
அக்2018
News & Events

News & Events

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top